×

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கொரோனா உதவி மையம் விழிப்புணர்வு வாகனம்

திருச்சி : திருச்சியில் கொரோனா உதவி மையம் மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.ஜமால் முகமது கல்லூரியும், நல் உள்ளங்கள் அறக்கட்டளையும் இணைந்து உருவாக்கிய ‘ஜமால் முகமது கல்லூரி கொரோனா தடுப்பு உதவி மையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பையை ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த உதவி மையம் மூலம் ஆதரவற்றோர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்குதல், சாலையோர மற்றும் தேவையுடையோர்களுக்கு மதிய உணவு வழங்குதல், கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம், ஆம்புலன்ஸ் உதவி எண்கள் போன்ற சிறப்புப் பணிகளையும், கொரானாவால் உயிரிழந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கான குழுவினர்களின் எண்கள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து வழிகாட்டுதல், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் மூலம் வழிகாட்டுதல், மருத்துவமனைகளின் தொடர்பு எண்கள் போன்ற சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுதீன், பொருளாளர் ஹாஜி ஜமால் முகமது, உதவி செயலர் அப்துஸ்சமது, கவுரவ இயக்குநர் அப்துல் காதார் நிகால் ஆகியோர் கலந்துகொண்டனர்.மணப்பாறை: மணப்பாறை அரசு மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட நபர்களையும், படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக, மணப்பாறை வெஸ்ட் ரோட்டரி சங்கத்தின் சார்பில், அரசு மருத்துவமனைக்கு 10 சிலிண்டர்கள், 7 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் முட்டை, வேர்க்கடலை, சுண்டல், பாசிப்பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் என மொத்தம் ரூ.5.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை அமைச்சர் வழங்கினார். இந்த ஆய்வின்போது, எம்எல்ஏ அப்துல்சமது, இணை இயக்குநர் லட்சுமி, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துகார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்….

The post திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கொரோனா உதவி மையம் விழிப்புணர்வு வாகனம் appeared first on Dinakaran.

Tags : Corona Help Desk ,Jamal Mohammed College ,Trichy ,Minister ,KN Nehru ,Corona Help Center and Awareness Vehicle ,Corona Help Center Awareness Vehicle ,Dinakaran ,
× RELATED திருச்சி ஜமால் முகமது கல்லூரி புதிய முதல்வர் நியமனம்